தற்போதைய செய்திகள்

தேவையற்ற நிலையிலும் மின்சாரத்தை  வீணடித்து நடந்த மதுரை  மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கூட்டம்

மதுரை  மின் நுகர்வோர்  கூட்டமைப்பின் கூட்டம் மதுரை ராஜா  அண்ணாமலை மஹாலில்  பாலசுந்தரம் தலைமையில் நடந்தது .கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் ,சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன

ஜெயப்பாண்டி

மதுரை  மின் நுகர்வோர்  கூட்டமைப்பின் கூட்டம் மதுரை ராஜா  அண்ணாமலை மஹாலில்  பாலசுந்தரம் தலைமையில் நடந்தது .

கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் ,சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன

டிசம்பர் 28 முதல் தமிழக முதல்வர்,அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர்கள்  உள்ளிட்டோர்களுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்துவது என்றும்,

மத்திய அரசிடம் இருந்து 2000 மெகாவாட் மின்சாரத்தை பெற்றிட தேவையான மின் பாதைகளை புதுபிக்க புதுபிக்க நடவடிக்கை ,மற்றும்

ஜனவரி 9-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சாரவாரிய அலுவலுகம் முன்பும் போராட்டம் நடத்துவது எனவும்  முடிவு செய்தனர் .

இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால்  மின்சார சிக்கனம் வேண்டி நடத்தப்பட்ட அந்த கூட்டத்தில் ,அரங்கத்தில் உள்ள அனைத்து குளிர்சாதன பெட்டிகளும் ஆட்கள் யாரும் அற்ற நிலையிலும் இயங்கி கொண்டிருந்தது. இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு   குளிர்சாதன பெட்டியை அணைக்க  ஆணை வரவில்லை என பொறுப்பற்ற நிலையில் பதிலளித்துள்ளனர்  .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT